
கோட்டாவை காப்பாற்றினாரா அலி சப்ரி ? அமெரிக்க வெளியுறவுத் துறை ஆய்வு
இலங்கையின் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, 2019 ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போலியான அமெரிக்க வெளியுறவுத்துறை ஆவணத்தை சமர்ப்பித்ததாக, அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றப்பரிசோதனை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராகச் செயல்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ச, “அமெரிக்க குடியுரிமையை துறந்துவிட்டு தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.” என பல ஆவணங்களை கூறியதுடன், அதனை ஊடக சந்திப்பில் வெளியிட்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் , அலி சப்ரி சமர்ப்பித்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை சந்தேகப்படுத்தும் கேள்விகள் எழுந்தன.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால், அமெரிக்க சட்டத்தின் படி அலி சப்ரிக்கு கடுமையான தண்டனைகளை வழங்கபடுவதற்கு அதிகமான சாத்தியங்கள் காணப்படுகின்றது.
அமரிக்காவின் சட்டம், “எந்தவொரு பதிவேட்டில் அல்லது ஆவணங்களில் தெரிந்தே மாற்றங்கள் செய்வது, அழிப்பது, சிதைப்பது, போலியாக்குதல், தவறான பதிவு செய்தல், விசாரணை அல்லது முறையான நிர்வாகத்தை தடுக்கும், மற்றும் செல்வாக்கு செலுத்தும் நோக்கத்துடன், செயல்படுவது போன்றவை கடுமையான குற்றம் என்பதுடன், 20 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.” என்று கூறுகின்றது.
இவ்வாறு இருக்கையில், அலி சப்ரி சமர்ப்பித்த ஒரு சத்திய வாக்குமூலம் போலியானது என அமெரிக்க வெளியுறவுத்துறை காண்டறிந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், இலங்கை உயர்ஸ்தானிகர் ஆலயத்திய் முன்னாள் அமெரிக்க தூதரகத்தில் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டவர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதாவது அவரின் கருத்துப்படி, அமெரிக்காவில் அலி சப்ரி மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்,அவரது தொழில்முறை வாழ்க்கையை மீட்க முடியாதவாறு பாதிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
இந்த விசாரணையின் மூலம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு போலி ஆவணங்களைக் கொண்டு, அப்போதைய இலங்கை தேர்தல் ஆணையராக இருந்த மஹிந்த தேசப்பிரிய, அலி சப்ரியால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல், மஹிந்த தேசப்பிரியவிற்கு அமெரிக்க தூதரகத்தில் இருந்து வந்ததாக நம்பப்படும் தொலைபேசி அழைப்புகள், உண்மையில் அலி சப்ரியின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கையர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஏப்ரல் 17 அன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சத்தியப்பிரமானம் செய்ததின் நம்பகத்தன்மையும், கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இரத்து 2019 ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு வந்ததாக அலி சப்ரி தெரிவித்தமையையும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆராய்ந்து வருகிறது.
தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிரூபிக்கப்பட்டால், அலி சப்ரிக்கும் இலங்கையின் அரசியல் சூழலுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படக்கூடும்.
இந்த விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், உண்மையை வெளிக்கொணர அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதியாக உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.