
கரையோர ரயில் சேவைகளில் தாமதம்
பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கரையோர வழித்தடத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான ரயிலில் பயணித்த பயணிகள், வேறொரு ரயில் மூலம் பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ரயில்வே மேலும் தெரிவித்துள்ளது.