மாஸ்டர்ஸ் லீக் கிண்ணத்தை வென்றது இந்திய அணி

மாஸ்டர்ஸ் லீக் கிண்ணத்தை வென்றது இந்திய அணி

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

குறித்த போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் லின்டல் சிம்மன்ஸ் 57 ஓட்டங்களையும், ட்வெய்ன் ஸ்மித் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த நிலையில் 149 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் அம்பாத்தி ராயுடு 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடருக்கான கிண்ணத்தை இந்திய மாஸ்டர்ஸ் அணி சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )