
சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நிபுணர் குழு
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.
இந்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தருமான உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் பணிப்பாளர் நாயகமாக நான்கு உறுப்பினர்களும், மேலதிக உறுப்பினர்களாக நான்கு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்