எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

கண்டி நகரின் அபிவிருத்தி குறித்து, கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற கண்கானிப்பு மற்றும் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தென் ஆசியாவின் மிகப் பெரிய கட்டடமாகக் கருதப்படும், கண்டி போகம்பர சிறைச்சாலை வளாகத்தை அபிவிருத்தி செய்வதும் இத்திட்டத்தின் பிரதான குறிக்கோள் ஆகும், என்றும் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதன்படி, மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தல்களின்படி தொல்பொருள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இது தொடர்பான திட்டங்களைத் தயாரித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)