அத்லெட்டிகோவை வீழ்த்திய பார்சிலோனா

அத்லெட்டிகோவை வீழ்த்திய பார்சிலோனா

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் இன்று (17) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.

பார்சிலோனா சார்பாக பெரன் டொரஸ் இரண்டு கோல்களையும், றொபேர்ட் லெவன்டோஸ்கி, லமீன் யமால் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லெட்டிகோ சார்பாக ஜூலியன் அல்வரேஸ், அலெக்ஸான்டர் சொர்லொத் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில் தமது மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற அத்லெட்டிக் பில்பாவோவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் செவிய்யா தோற்றது.

லா லிகா புள்ளிகள் பட்டியலில் தலா 60 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான மேம்பட்ட முடிவு காரணமாக முதலாமிடத்திலும் பார்சிலோனாவும், இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றது.

56 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 52 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிக் பில்பாவோவும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட பார்சிலோனா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)