சுகாதாரமற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

சுகாதாரமற்ற உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டிச்சாலை மற்றும் சம்மாந்துறை பகுதியில் உள்ள உணவு உற்பத்தி நிலையங்கள், இறைச்சிக் கடைகள் என்பன சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாடுக்கு அமைய நேற்று (19) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை இடம் பெற்றது.

இதன்போது, சுகாதார வைத்திய அதிகாரிகளினால் குறித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராகவும், 2 உணவகங்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் சம்மாந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது ரூ. 30 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையும் செய்யப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான குழுவினர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image
image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)