
ஆர்ஜென்டீனக் குழாமில் லொட்டரோ மார்டினெஸ் இல்லை
உருகுவே, பிரேஸிலுக்கெதிரான 2026 சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளை கெண்டைக்கால் பின்தசை காயம் காரணமாக ஆர்ஜென்டீனாவின் முன்களவீரர் லொட்டரோ மார்டினெஸ் தவறவிடவுள்ளதாக ஆர்ஜென்டீனா கால்பந்தாட்டச் சங்கம் நேற்று முன்தினம் (19) தெரிவித்துள்ளது.
அணித்தலைவர் லியனல் மெஸ்ஸி, போலோ டிபாலா, ஜியோவனி லோ செல்ஸோ ஆகியோருடம் மார்டினெஸுடன் காயம் காரணமாக இப்போட்டிகளைத் தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் நடைபெற்ற 12 தகுதிகாண் போட்டிகள் முடிவில் 25 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் வரிசையில் ஆர்ஜென்டீனா உள்ளது.
CATEGORIES Sports News