
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் !
ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளதுடன் இந்த போட்டி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இந்த முறை போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 10 ஆவது ஓவருக்கு பின்னர் புதிய பந்தை கோருவதற்கு வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது