
சர்வஜன பலயவின் கொழும்பு மாநகர முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
சர்வஜன பலய கட்சி, கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக தொழிலதிபர் ஹசன் அலால்தீனை நியமித்துள்ளது.
சர்வஜன பலய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கொழும்பில் நடத்திய இப்தார் நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அலால்தீன், முன்னர் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.