
2025ஆம் ஆண்டில் இதுவரை 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
நாட்டில் தற்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இவ்வருடம் ஆரம்பித்து இன்று (23) வரை 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகம, அஹுங்கல்ல, தெவிநுவர, கல்கிசை, தொடங்கொடை, மன்னார், அம்பலாந்தோட்டை, காலி, கொச்சிக்கடை, மினுவங்கொடை, மித்தெனிய, ஜா-எல, கம்பஹா, வெலிவேரிய, மிதிகம, அம்பலாங்கொடை, தெவுந்தர உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.