
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்டார்லிங்க் சேவை
ஸ்டார்லிங்க் சேவை இலங்கையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தரவு மற்றும் தகவல் தொடர்பு தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை இந்த செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் ஸ்டார்லிங்க் தரப்புடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக எரங்க வீரரத்ன தெரிவித்தார்.