ஐ.பி.எல் 2025 : ராஜஸ்தானை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

ஐ.பி.எல் 2025 : ராஜஸ்தானை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நெறய தினம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி நடைபெற்றது.

குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அபிஷேக் சர்மா – ட்ராவிஸ் ஹெட் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அபிஷேக் சர்மா 11 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்களை பெற்று தீக்ஷண பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்

மறுமுனையில் ட்ராவிஸ் ஹெட் 67 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த நிதீஷ் ரெட்டி 30 ஓட்டங்களும் ஹென்ரிக் க்ளாசென் 34 ஓட்டங்களும் பதிவு செய்தனர்.

தொடர்ந்து அதிரடியாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய இஷான் கிஷன் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்களை பெற்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதன்படி 20 ஓவர்கள் நிறைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்களை பதிவு செய்தது.

இதையடுத்து 287 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெயஸ்வால் 01 ஓட்டத்துடனும் அணி தலைவர் ரியான் பராக் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த நிதீஷ் ராணா 11 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதன் பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி
அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தது.

சஞ்சு சாம்சன் 66 ஓட்டங்களும் ஜூரல் 70 ஓட்டங்களும் பெற்று ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் இணைந்த ஷிம்ரன் ஹெட்மயர், சுபம் தூபே இணை சிக்ஸர், பவுண்டரியாக விளாசி ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்தது.

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 242 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )