
வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்
எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி நேற்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகங்களிலிருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், நிறுவப்பட்ட நடைமுறையின்படி வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.