சம்சுங் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்

சம்சுங் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்

சம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங்-ஹீ (Han Jong-Hee) இன்று காலை தனது 63 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹான் ஜோங்-ஹீ 1988 ஆம் ஆண்டு சம்சுங் நிறுவனத்தில் இணைந்துக் கொண்டார்.

2022 முதல் அவர் நிறுவனத்தின் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவுகளை மேற்பார்வையிட்டு வந்தார்.

அவர் சம்சுங் தொலைக்காட்சி வணிகத்தை 2006 ஆம் ஆண்டு முதல் உலக சந்தையில் முன்னணியில் வைத்திருந்ததுடன், LED தொலைக்காட்சிகளை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

அவர் 2022 ஆம் ஆண்டில் சம்சுங் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இணை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹான் ஜோங்-ஹீவின் மறைவு குறித்து சம்சுங் நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )