முச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்த கும்பல் கைது

முச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்த கும்பல் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முச்சக்கரவண்டிகளை திருடி சேஸ் மற்றும் என்ஜின் இலக்கங்கள் மற்றும் நிறங்களை மாற்றி விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களுடன், ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 13 முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெலிக்கடை மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் பிரகாரம் ஏக்கல, ஹோமாகம, கிரிந்திவெல, கடவத்தை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )