தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அந்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது நாளை (26) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று (24) முதல் 27 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஒவ்வொரு மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )