மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்க நடவடிக்கை

மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்க நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்குவதற்காகக் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் தாமதமான மஹபொல உதவித்தொகையைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மஹபொல உதவித்தொகையைப் பெறுவோரின் கணணி தரவுகளை நவீனமயப்படுத்துதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்னவின் தலைமையில் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )