
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் பிணையில் விடுதலை
இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம், அரச சேவையில் தங்களை இணைத்துக் கொள்ளும் செயல்முறையை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுகாதார அமைச்சு முன்பு நடத்திய போராட்டத்தின்போது இன்று (28) கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட இருவர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka