
தென்கொரியா காட்டுத்தீ ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
காட்டுத்தீ காரணமாக சுமார் 43,000 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.
காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டத்தால் மீண்டும் காட்டுத்தீ பரவியது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.