
தேசப்பந்துக்கு உதவிய நபருக்கு பிணை !
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கைது செய்யப்பட்ட நபரை 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.