
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை
தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 மேலதிக பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும், இதன் முதல் கட்டம் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும்.
புத்தாண்டு முடிந்து தங்கள் ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்குத் திரும்புவதற்காக, ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவை இயக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka