இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகை

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் இலங்கை வருகை

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சயாத்ரி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

143 மீட்டர் நீளமுடைய இந்த கப்பலில் 320 நிர்வாக குழுவினர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயமானது இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கப்பலின் நிர்வாக குழுவினர் நாட்டின் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, நாளை மறுநாள் (07) கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus (0 )