
பிள்ளையானை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுமதி பெற்றுள்ளது .
2006ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான் கடந்த 8ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுமதி பெற்றுள்ளது
CATEGORIES Sri Lanka