கொஸ்கமயில் ரயில் மோதி முச்சக்கர வண்டி தூக்கி வீசப்பட்டது

கொஸ்கமயில் ரயில் மோதி முச்சக்கர வண்டி தூக்கி வீசப்பட்டது

கொஸ்கம அளுத்அம்பலம புகையிரத கடவையில்,புகையிரதம் முச்சக்கர வண்டி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

,அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம், கொஸ்கம அளுத்அம்பலம பகுதியில் ,புகையிரத கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டி மீது மோதியதில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியின் என்ஜின் கழன்று பல மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டது.

விபத்தின் போது முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் ஒரு பெண்ணும் யணித்துள்ளதாகவும் இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

விபத்து இடப்பெற்றபோது ரயில் கேட் மூடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )