Tourist Family படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு

Tourist Family படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு

சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நந்தன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 1ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தின் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 2-ஆவது சிங்கிள் கடந்த 16ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில் வருகிற 23ஆம் திகதி ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )