
பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ; 13 பேர் பலி
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் இன்று (01) வழக்கம்போல் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலை தீ மளமளவென பரவியது. மேலும், அந்த ஆலையின் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது.
இந்த வெடிவிபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர்.
மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், தீயணைப்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES India