
மத்திய யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 18 பேர் பலி
மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த நகரான கிரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் குடியிருப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, “இராணுவ தரப்பினர் மற்றும் மேற்கத்தேய பயிற்றுவிப்பாளர்களை” இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.