
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகல்!
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவரை மாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இதன்படி தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதியவர் ஒருவரை நியமிப்பதற்கு அந்தக் கட்சியின் தலைமை பீடம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் தாம் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை எனவும் கட்சியாக இணைந்து ஒருவரை ஏகமனதாக தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.