
“எக்காரணம் கொண்டும் ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது ”
ஜனாதிபதித் தேர்தலை எக்காரணம் கொண்டும் ஒரு வருடத்திற்கு பிற்போட முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்று உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அரசியலமைப்பில் உள்ள ஒரு குறைப்பாட்டை பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலை ஒரு வருடத்திற்கு பிற்போட முடியும் என சிலர் கூறுகின்றார்கள்.
அவ்வாறான யோசனை ஒன்றை கடந்த காலத்தில் முன்வைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயர் நீதிமன்றின் நிலைப்பாட்டை கேட்டறிந்தார். எனினும் ஜனாதிபதித் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போட முடியாது என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka