
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு !
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் 88 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 03 ஆம் திகதி 12 வயதுக்குட்பட்ட சகல சிறுவர்களும் இலவசமாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 03ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள நடைபெறவுள்ளது.