
டீ.விக்கு படம் காட்டும் திட்டமே கிளீன் ஸ்ரீலங்கா
ஊடகங்களுக்கு முன் படம் காட்ட முன்னெடுக்கப்படும் திட்டம் தான் இன்றைய அரசு முன்னெடுக்கும் கிளீன் ஸ்ரீலங்க திட்டமே தவிர சுகாதார சிற்றூழியர்களின் சுமைக்கு ஒரு துளியேனும் அந்த திட்டத்தால் நன்மை கிடைக்கவில்லை என்றும்
மாநகரசபையின் வடபிராந்திய தொழிற் சங்க தலைவர் ஆசீர்வாதம் ஜோன்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தற்போதைய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவத்துள்ளதாக கூறுகின்றது. அதில் ஒன்றுதான் இந்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டமும் இருக்கின்றது.
குறிப்பாக நாடு முழுவதும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திட்டத்தை நடைமுறடுத்தும் நாளில் மட்டும் படைத்தரப்பினர், பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களின் அதிகாரிகள் என பலர் ஒன்று கூடி ஊடகங்களை அழைத்து குப்பைகளை அகற்றி கிளீன் ஸ்ரீகங்கா என்கிறார்கள்.
ஊடகங்கள் சென்றதன்பின் மாநகர ஊழியர்கள் தான் நகரில் இருக்கின்ற அழுக்குகளை அகற்ற வேண்டும்.
ஒரு நாள் கூத்தாக காட்டப்படும் இந்த திட்டம் சுகாதார சிற்றூழியர்களான எமக்கு எந்த நன்மையையும் தரவில்லை. மாறாக சுமைகளையே கொடுக்கின்றது.
எனவே ஊடகங்களுக்கு படம் காட்டுவதாக இருக்கும் இந்த திட்டத்தை எம் தொழிலாளர் நலன் சார்பானதாக உருவாக்குவது அவசியம்.
இதே நேரம் எமது தொழிலாளர்களின் வரவை உறுதிசெய்யும் கையடையாள இயந்திரம் முன் முகங்களை காணிப்பதும் பணி குறித்த நேரத்தித்கு முடிந்தாலும் அவ் இயந்திரம் முன் நீண்ட நேரம் காத்திருப்பதும் எமக்கு இடையூறாக இருக்கின்றது. அதற்கான தீர்வும் அவசியம் ‘ என்று மாநகரசபையின் வடபிராந்திய தொழிற் சங்க தலைவர் ஆசீர்வாதம் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

