
மறைந்த திறைசேரி அதிகாரியின் இறுதிக்கிரியை இன்று
நிதியமைச்சிற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ரங்க நிஷாந்த ராஜபக்ச என்பவரின் இறுதிக்கிரியை இன்று (மே 2) பிற்பகல் நடைபெறுகிறது .
இவர் கடந்த 30ஆம் திகதி தனது வீட்டுத் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த மரணம் அவராகவே ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் ஏற்பட்ட தற்கொலை என இவரது மரணம் குறித்து விசாரணை நடத்திய நால்வர் அடங்கிய குழு, நேற்று உறுதிப்படுத்தியது.
பணி இடைநீக்கம் செய்யப்படும் போது, இவர் நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்தார்.

