
தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி முன்னிலை
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
பொன்னாகரம், தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், அரூரை தவிர்ந்த மற்ற அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் (தவெக) வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரூர் தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், அங்கு போட்டி நிலை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இறுதி நிலவரம் மாறக்கூடியதாக தேர்தல் வட்டாரங்கள் கூறுகின்றன.
CATEGORIES India

