
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 12 பேர் காயம்
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த விருந்தில் இளைஞர்கள் கூடியிருந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

