TVK சார்பாக திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டி

TVK சார்பாக திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டி

இம்முறை தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவுகளில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

காலை 8 மணி முதல், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 1:20 நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளிலும், அதிமுக 57 தொகுதிகளிலும், திமுக 49 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

மேலும், திருச்சி கிழக்கில் 29884 வாக்குகள் பெற்று, 12173 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

இதனால், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு தொகுதியில் வென்றால் ஏதாவது ஒரு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்ய வேண்டும்.

இந்த நிலையில், விஜய் திருச்சி கிழக்கில் பதவி விலகல் செய்வார் என்றும் அத்தொகுதியில் மீண்டும் நடைபெறும் இடைத் தேர்தலில் தவெக சார்பாக நடிகை த்ரிஷா போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையிலுள்ள விஜய் வீட்டிற்கு நடிகை த்ரிஷா தற்போது வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )