இந்த ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக 628 வெளிநாட்டவர்கள் கைது

இந்த ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக 628 வெளிநாட்டவர்கள் கைது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 628 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் F. U. வூட்லர் இது குறித்து தெரிவித்தார் ,

கைது செய்யப்பட்டவர்களில் சீனா, இந்தியா, வியட்நாம், மியான்மர், கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

குடிவரவுச் சட்டங்களை மீறியமை மற்றும் சைபர் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து, அங்கு சட்டவிரோத மோசடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த குற்றச்சாட்டின் கீழ், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )