ராஜங்கனே சத்தாரதன தேரர் கைதுசமூக வலைத்தளங்கள் வாயிலாக அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைதுசமூக வலைத்தளங்கள் வாயிலாக அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு

ராஜங்கனே சத்தாரதன எனப்படும் பிக்கு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக யூடியூப் தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இவர் வெளியிட்டு வந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னர், கடந்த வருடம் ஸ்ரீலங்கா ராமண்ய மகா நிகாயவின் செயற்குழுவினால் இவர் சங்கத்திலிருந்தும் நிக்காயவிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )