கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு

கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு

கெக்கிராவ பிரதேசத்தின் கிரிமெட்டியாவ பகுதியில் அமைந்துள்ள கிரிமெட்டியாவ குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, கிரிமெட்டியாவ குளத்தில் படகு ஓட்டிச் சென்றபோது படகு திடீரென கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )