செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா – இஸ்ரேல் இணைந்து செயல்பட வேண்டும்

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா – இஸ்ரேல் இணைந்து செயல்பட வேண்டும்

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரேலின் முன்னாள் தூதரும், வெளியுறவு அமைச்சகத்தின் தொழில்நுட்பக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் இலான் ஃப்ளஸ் (Ilan Fluss) தெரிவித்துள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு துறையில் புதுமை மற்றும் ஆராய்ச்சி திறன்களில் இஸ்ரேலுக்கு வழங்க பல அம்சங்கள் உள்ளதாகவும், இந்த துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புது டெல்லியில் மாநாட்டை நடத்தியதுடன், இந்திய அரசின் பல்வேறு தரப்பினருடனும் பல சந்திப்புகளை மேற்கொண்டோம்.

இருதரப்பு உறவுகளை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தோம்.

இந்தியா மற்றும் இஸ்ரேல் நெருங்கிய கூட்டாளிகள்.

பல துறைகளில் நாம் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

இருநாடுகளுக்கிடையிலான எதிர்கால உறவுகள் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு மேலும் வலுப்பெறும்

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் இருநாடுகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் முக்கிய பங்காற்றும்

இந்தியாவின் வேகமான டிஜிட்டல் வளர்ச்சியும், இஸ்ரேலின் புதுமை சார்ந்த தொழில்நுட்ப திறன்களும் ஒன்றிணைந்தால், உலகளாவிய தொழில்நுட்ப மேடையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் ” எனவும் இஸ்ரேலின் முன்னாள் தூதரும், வெளியுறவு அமைச்சகத்தின் தொழில்நுட்பக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் இலான் ஃப்ளஸ் (Ilan Fluss) தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )