வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (11) இரவு 11.30 மணி வரை இந்த அறிக்கை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )