
கருப்பு டிரெய்லர் வெளியானது
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி உள்ளப் படம் கருப்பு. இப்படத்தில் சூர்யாவுடன் நடிகை த்ரிஷா இணைந்துள்ளார்.
இந்திரன்ஸ், நட்டி, சுவாசிகா மற்றும் ஷிவதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளது.
CATEGORIES Cinema

