
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திடிய – கஹவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் அதிகாரிகள் நேற்று (10) முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
CATEGORIES Sri Lanka

