சோடியம் குறைபாடும் தலைவலியை உண்டாக்கும்

சோடியம் குறைபாடும் தலைவலியை உண்டாக்கும்

தலைவலி எப்போதும் மன அழுத்தம், காபின் அல்லது நீர்ச்சத்து குறைபாடு ஆகியவற்றால் மட்டும் ஏற்படுவதில்லை.

சில சமயங்களில் சோடியம் குறைபாடும் அதற்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் உடலில் திரவ சமநிலையையும், ரத்த அளவையும் ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுத்தும் முக்கிய எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாக சோடியம் விளங்குகிறது.

ரத்த ஓட்டத்தை பராமரிக்கவும், செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் திரவங்கள் செல்வதற்கும் உதவுகிறது.

குறிப்பாக வியர்ப்பதாலோ, அதிக அளவு தண்ணீர் குடிப்பதாலோ ரத்தத்தில் சோடியம் அளவு குறையும். அப்போது உடல் சமநிலையை பராமரிக்க சிரமப்படும். அதனால் ரத்த ஓட்டம் பாதிப்படையும். ரத்த அழுத்தத்தில் மாற்றம் உண்டாகலாம். இவை தலைவலி ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.

குறிப்பாக நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் அல்லது அதிகம் தண்ணீர் அருந்துபவர்கள் கூட அன்றைய தினம் உடலுக்கு தேவைப்படும் நீரின் அளவை பருகாமல் இருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில் எலக்ட்ரோலைட் சமநிலையில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட தலைவலியை உண்டாக்கலாம்.

தலைவலி அடிக்கடி ஏற்பட்டாலோ, மிகக் கடுமையாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது சிறந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )