
காதலியை கரம் பிடித்த அமேசான் நிறுவனர்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (61) தனது நீண்ட நாள் காதலியான 55 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸை இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று (28) திருமணம் செய்து கொண்டுள்ளார்.
The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ்யை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் காதலித்து வருகிறார்.
ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் – ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

