
ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கியமான இராணுவ தளபதிகள், அணுசக்தி துறையில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் பலர் உயிரிழந்துள்ளனர்

தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த இராணுவ கமாண்டர்கள், விஞ்ஞானிகளின் உடல்களுக்கு ஈரான் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
தலைநகர் டெஹ்ரானில் நேற்று (28) இறுதிச் சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் ஊர்வலம் நடைபெற்றதாக ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

