
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருடங்கள் சிறை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உயர் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறையும் 30 இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.
அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் மேலதிகமாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, இவ்வாறு நீதிமன்ற அவமதிப்புக் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட்டுள்ளது .
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் மேலும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

