நீச்சல் தடாகத்தில் மூழ்கி13 வயது சிறுவன் உயிரிழப்பு

நீச்சல் தடாகத்தில் மூழ்கி13 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி நேற்று (17) 13 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, எச்சரிக்கையின்றி நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது என பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )