காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் : கடந்த 24 மணி நேரத்தில் 6 பாலஸ்தீனர்கள் பலி

காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் : கடந்த 24 மணி நேரத்தில் 6 பாலஸ்தீனர்கள் பலி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதுடன், சிலர் வீதிகளில் காயமடைந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவினரும் அவசர மருத்துவ குழுக்களும் சம்பவ இடங்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் அமுலுக்கு வந்ததாக கூறப்படும் “போர்நிறுத்த” காலத்திலிருந்து இதுவரை 877 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,602 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )