
எஹலியகொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
எஹலியகொட, வலவிட்டவத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று குறித்த நபரை தாக்கிய பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னணி மற்றும் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

